எந்தவொரு கட்டிட வடிவமைப்பாளருக்கும் அல்லது வீட்டு உரிமையாளருக்கும் தேவைப்படும் மிக முக்கியமான கூறுகளில் ஒன்று நெருப்பிலிருந்து பாதுகாப்பு. இதனை உறுதிப்படுத்துவதற்காகத் தற்போது பல வீடுகளில் ஸ்மோக் டிடெக்டர்கள் மற்றும் அலாரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும், வீட்டு உரிமையாளர்கள் இன்னும் மீள முடியாத சேதத்தை அடைகின்றனர்.
தீப்பற்றும்போது, மிகவும் பாதிக்கப்படக்கூடியவையாக உள்ள உங்கள் தளபாடங்கள் எரிபொருளாக செயல்படுவதால், சேதத்தை அதிகரிக்கும். எனவே, கட்டுமானப் பொருட்களின் நெருப்பிற்கு எதிரான திறம் குறித்து பெரும் கவலை எழுந்துள்ளது. ப்ளைவுட் என்பது தளபாடங்களுக்கும் கட்டுமானப் பணிகளுக்கும் மிக அதிகம் பயன்படுத்தப்படும் பொருள். செஞ்சுரிப்ளை தீ அபாயங்களைத் தடுத்து உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும், ஒரு தனித்துவமான ஃபயர்வால் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது,
செஞ்சுரிப்ளை-இன் ஃபயர்வால் தொழில்நுட்பம், ப்ளைவுட்டின் பாலிமர் மேட்ரிக்ஸில் இந்த வகைமையில்-மிகச்சிறந்த நெருப்பு-அணைக்கும் நானோ-பொறியியல் துகள்களை உட்புகுத்துகிறது. ப்ளைவுட்டின் எரியக்கூடிய தன்மையைக் குறைப்பதால், இது வீட்டிற்கு பாதுகாப்பானது.
செஞ்சுரிப்ளை-இன் ஃபயர்வால் தொழில்நுட்பம் நெருப்பு அபாயங்களையும் அவற்றின் விளைவுகளையும் குறைக்க மூன்று வழிகளில் செயல்படுகிறது.
1. நெருப்பைத் தாமதப்படுத்துகிறது: தீ விபத்தில் மிக முக்கியமான செயல்நிலைகளில் ஒன்று, தீ பரவாமல் கட்டுப்படுத்துவதும், தடுப்பதும் ஆகும். ஃபயர்வால் டெக்னாலஜி ப்ளைவுட்டை குறைவான தீப்பற்றும் தன்மை கொண்டதாக்கி, அது தீ ஊடகமாக மாறுவதைத் தடுக்கிறது.
2. சுய-தீயணைப்புகள்: சாதாரண ப்ளைவுட்களுக்கு தீயை அணைக்க தண்ணீர் அல்லது தீயை அணைக்கும் கருவிகள் போன்ற வெளிப்புற செயல்பாடுகள் தேவைப்படும்போது, செஞ்சுரிப்ளை ப்ளைவுட்டுக்கு அது தேவையில்லை. நெருப்பின் மூலத்தை அப்புறப்படுத்தியவுடன் ஃபயர்வால் தொழில்நுட்பம் கொண்ட ப்ளைவுட் சுய-தீயணைப்பு செய்துகொள்ள முடியும்.
3. புகை உருவாவதைத் தடுக்கிறது: நெருப்பின் மிகவும் அபாயகரமான விளைவுகளில் ஒன்று நச்சுப் புகைகள் ஆகும். பெரும்பாலான ப்ளைவுட்கள் உற்பத்தியில் இரசாயனங்களைப் பயன்படுத்துகின்றன. அவை எரியும் போது நச்சு வாயுக்களை வெளியிடுகின்றன. இருப்பினும், செஞ்சுரிப்ளை ப்ளைவுட் நச்சுத்தன்மையற்ற பிணைப்பு வேதிப்பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. மேலும், ஃபயர்வால் தொழில்நுட்பம் தீ எரியும்போது புகை உருவாவதைத் தடுத்து மூச்சுத்திணறல் அபாயத்தைக் குறைக்கிறது.
செஞ்சுரிப்ளை ப்ளைவுட் ஃபயர்வால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான காரணங்கள்
உங்கள் வீடு தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்வதை விடவும் பெரிய காப்புறுதி ஏதுமில்லை. செஞ்சுரிப்ளை ப்ளைவுட் ஃபயர்வால் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பின்வருவனவற்றை உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன:
விபத்துகள் முன்னறிவிப்பின்றி நிகழும் என்பதால், சிகிச்சையை விட தடுப்பே எப்போதும் விரும்பத்தக்கது. வெள்ளம் மற்றும் தீ போன்ற இயற்கைப் பேரழிவுகள் மனித உயிர்களையும் உடைமைகளையும் கடுமையாகப் பாதிக்கின்றன. எனவே, அவற்றைப் பாதுகாக்க தீ தடுப்பு ப்ளைவுட்களை வீடுகள் அல்லது வணிகக் கட்டிடங்களில் வைப்பது அர்த்தமுள்ளதாகவே அமையும்.
செஞ்சுரிப்ளை ப்ளைவுட்டின் குறைவான தீப்பற்றும் தன்மை ஒரு தீப்பொறி ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. செஞ்சுரிப்ளை நானோ-பொறியியல் சார்ந்து கட்டமைக்கப்பட்ட துகள்களை அழுத்தத்தின் கீழ் இதனுடன் ஒன்றிணைப்பதன் மூலம் ப்ளைவுட்டை எரியக்கூடிய தன்மைக்காக செயற்படுத்துகிறது. இதனால் தீயினால் ஏற்படும் சேதம் குறைகிறது.
தீ தடுப்பு ப்ளைவுட்டின் தன்மை, நெருப்பிலிருந்து பாதுகாப்பை வழங்குவதோடு, நீர்ப்புகாத் தன்மையையும் தட்பவெப்ப தாங்குதிறத்தையும் அளிக்கிறது. தீயைத் தடுக்கக்கூடிய ப்ளைவுட் தட்பவெப்பம், நீர் ஆகியவற்றுடன் தீ விபத்துகளையும் திறம்படத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டது. எனவே, இது பொதுவாக தட்பவெப்பக் கூறுகளுக்கு உட்பட்ட கட்டிடங்களில் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது.
வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள தளபாடங்களுக்கு கரையான்களும் துளைப்பான்களும் எளிதில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும். தீ தடுப்பு ப்ளைவுட் மூலம் வழங்கப்படும் பூச்சி பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டால் என்னவாகும்? செஞ்சுரிப்ளை-இன் ப்ளைவுட் பூச்சிகளை எதிர்ப்பதற்காக வேதிமுறையில் செயற்படுத்தப்படுகிறது. இது வீடுகளிலும் வணிகங்களிலும் பிரபலமான பொருளாகியுள்ளது. இது பூச்சித் தாக்குதல்களுக்கு எதிராக தகர்க்க முடியாத உத்தரவாதத்தை உள்ளடக்கியதாகும்.
தீப்பிழம்புகள் தீ-எதிர்ப்பு ப்ளைவுட் மூலம் ஊடுருவவோ அல்லது பரவவோ முடியாது. இதனால், ப்ளைவுட் எரிந்து விழுவதற்குள் தீ விபத்தில் சிக்கியவர்கள் தப்பியோட நேரம் கிடைக்கிறது. கூடுதலாக, மக்கள் கட்டிடத்தை விட்டு வெளியேறுவதற்கும், தீயைக் கட்டுப்படுத்துவதற்கும் இது நிறைய நேரத்தை வழங்கி உதவுகிறது.
நெருப்பை விடவும் புகை மற்றும் வாயுக்களால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாகும் நபர்களே அதிகம். CO மற்றும் CO2 ஆகியவற்றின் அபாயகரமான இணைவு புகையை உருவாக்குகிறது. தீ விபத்து சார்ந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணியாக இருப்பது புகையை சுவாசிப்பதாகும். புகை மற்றும் நச்சு இரசாயனங்கள் மூச்சுத்திணறல் மற்றும் மூச்சடைப்பிற்கு வழிவகுத்து வெளியேற்றும் செயல்முறையில் தடங்கலை ஏற்படுத்துகிறது. செஞ்சுரிப்ளை-இன் நெருப்பு-எதிர்ப்பு ப்ளைவுட் உமிழ்வுகளைக் குறைக்க வேதிமுறையில் செயற்படுத்தப்படுகிறது.
குடியிருப்பு மற்றும் வணிகம் உட்பட அனைத்துக் கட்டிடங்களிலும் தீ தடுப்பு ப்ளைவுட்டைப் பயன்படுத்தலாம். மேலும், இது நீடித்து உழைப்பதும் நெடுங்காலம் வரக்கூடியதுமாகும் என்பதால் அனைத்து நோக்கங்களுக்கும் சிறந்த தேர்வாக அமைகிறது.
தீப்பற்றுதல் எங்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால், உங்கள் வீடு மற்றும் வணிகத்தைப் பாதுகாக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். நெருப்பை எதிர்க்கும் தன்மையுள்ள ப்ளைவுட் நெருப்பின் அபாயங்களைக் குறைப்பதுடன் உயிர்களைக்கூடக் காப்பாற்றலாம். உங்கள் தேவைகளைப் பொறுத்து, உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் இதைப் பயன்படுத்தலாம்.
Loading categories...