அறிமுகம்
தண்ணீரால் ஏற்படும் சேதாரம் பற்றிய பயமின்றி உங்களுக்கு நீடித்துழைக்கும் பிளைவுட் கிடைக்கும் என்று நான் கூறினால் எப்படியிருக்கும்? Sainik710 பிளைவுட் மூலம் இது சாத்தியமே. இந்தக் கட்டுரையில், CenturyPly இன் Sainik710 பிளைவுட்டின் பண்புகளை நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். மேலும், பிளைவுட்டின் வெவ்வேறு கிரேடுகள் குறித்த சில தகவல்களையும் பகிர்ந்திருக்கிறோம். அதன் மூலம் தொடங்கலாம்!
Sainik710 பிளைவுட்டை பயன்படுத்தலாம்
கட்டுமானம், இண்டீரியர் டிசைன் மற்றும் பர்னிச்சர் தொழில்துறையில் தரமான பிளைவுட்டே அதிகமான அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனுடைய மிகவும் பொதுவான பயன்பாடுகளுள் சில:
● விளக்கமைப்பைப் பிரிப்பதற்கு
● பர்னிச்சர், குறிப்பாக கப்போர்டுகள், கிச்சன் கேபினெட்கள் மற்றும் அலுவலக டேபிள்களைச் செய்வதற்கு
● மரச் சட்டகப் பணிகளுக்கு
● தரையமைக்கும் முறைகளின் ஒரு பாகமாக
Sainik பிளைவுட்டின் தரநிலைப் பண்புகள்
Sainik பிளைவுட்டை இந்திய வீட்டுச் சூழலுக்கேற்ற சரியான தேர்வானதாக்கும் பின்வரும் தரநிலைப் பண்புகளை ஆராய்ந்திடுங்கள்.
● அதிக வலிமை:
எந்த மரத்தில் செய்யப்பட்டதோ அந்த மரத்தின் கட்டமைப்புரீதியான வலிமையை பிளைவுட் கொண்டிருக்கிறது. இந்தப் பண்புகளுக்கும் மேலாக, ஒவ்வொரு மேலடுக்கினுடைய மேற்பரப்புகளும் ஒன்றுக்கொன்று 90 டிகிரி கோணங்களில் அடுக்கப்படுகின்றன. இது, குறிப்பாக ஓரங்களில் ஆணியடிக்கப்படும்போது, பிளந்துவிடாமல் அந்த மொத்த ஷீட்டையும் தக்கவைக்கிறது. Sainik710 பிளைவுட் குறித்துப் பேச வேண்டுமானால், அதிகரித்த நிலைத்திறனுக்காக இது ஒட்டுமொத்த ஷீட்டிற்குமே சீரான வலிமையைத் தருகிறது எனலாம். மேலும், அமைக்கப்பட்டுள்ள தரநிலைகளின்படி எடை விகிதத்திற்கு ஏற்ற வேண்டுமளவுக்கான வலிமையை இது கொண்டிருக்கிறது. இதுதான் இதனை மாடுலர் கிச்சன், வார்டுரோப்ஸ் மற்றும் சுற்றுச்சுவர்களுக்கு ஏற்றதாக்குகிறது.
● ஈரப்பத தடுப்பு:
பிளைவுட்டை ஒட்டுவதற்குப் பயன்படுத்தும் பசையின் வகையே அதற்கு ஈரம் மற்றும் ஈரப்பத எதிர்ப்புத்திறனை வழங்குகிறது. பெயிண்ட் அல்லது வார்னிஷ் லேயரும்கூட தண்ணீரால் ஏற்படும் சேதத்தைத் தடுப்பவையாக இருக்கலாம், ஆனால் இறுதியான நம்பிக்கை என்னவோ பிளைவுட்டின் தரத்தைப் பொறுத்ததுதான்! இதனால்தான் அலமாரிகள் மற்றும் கிச்சன் கேபினெட்டுகள் போன்ற வெளிப்புறப் பயன்பாட்டிற்கு Sainik710 பிளைவுட் பொருத்தமானதாக உள்ளது. இது கான்க்ரீட் இறுகிக்கொண்டிருக்கும்போது அதனைத் தக்கவைத்திருக்கவும் பயன்படுத்தப் பொருத்தமானது. தரைத்தளங்கள் உட்பட இண்டீரியர் பயன்பாடுகளில் ஈரப்பத எதிர்ப்பு முக்கியமானது. இதுதான், தண்ணீர் மற்றும் அதிகப்படியான வெப்பநிலைகளுக்கு உள்ளாகும்போது பிளைவுட் வளையாமலும், சுருங்காமலும் அல்லது இழுபடாமலும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
● மோதல் அதிர்வுத் தடுப்பு:
பிளைவுட்டிற்கு பிளை ஷீட்டுகளின் கலப்பு லேமிஷனிடமிருந்து கிடைத்த அதிகப்படியான விறைப்புத்திறன் உள்ளது. இது அழுத்தத்தை பெரும் பகுதிக்கும் பரவச் செய்து விறைப்புத்திறன் அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால்தான் Sainik710 பிளைவுட்டால் அதற்கென்று நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் இருமடங்கு அதிகச் சுமையை தாங்கிக்கொண்டிருக்க முடிகிறது. இது குறுகியகால நில அதிர்வு அல்லது அதிகப்படியான காற்று வீசும்போது மிகவும் முக்கியமானது.
BWP கிரேடு பிளைவுட்: ஈரப்பத சேதத்திற்கு எதிரான கவசம்!
BWP கிரேடு பிளைவுட்டான Sainik710 பிளைவுட்டை வழங்குகிறது CenturyPly. கொதிக்கும் நீர் புகா (BWP - Boiling Water Proof) பிளைவுட் என்பதைக் குறிக்கும் இது ஈரப்பதத்தினால் ஏற்படும் சேதங்களுக்கு எதிரான கவசமாகச் செயல்படுகிறது. இந்தியா போன்ற, காலநிலை அடிக்கடி மாறிக்கொண்டிருப்பது போன்ற நாட்டில் ஒவ்வொரு இண்டீரியருக்கும் இதுதான் அவசியம் தேவையான ஒன்று. கொதிக்கும் நீர் புகா பிளைவுட்டானது பலத்த மழை, வெயில் காலங்கள், காற்றடிக்கும் காலங்கள், வேனிற்காலம் மற்றும் குளிர்காலங்கள் போன்ற அனைத்து பருவங்களிலும் தாக்குப்பிடிக்கக்கூடிய சிறந்த மூலப்பொருளாக விளங்குகிறது.
மேலும், இந்த கிரேடிலான பிளைவுட் மிகுந்த மீட்புத்திறனும் பல வருடங்களுக்கு நீடித்துழைப்பதாகவும் விளங்குகிறது. அதிகப்படியான மோதல் அதிர்வு எதிர்ப்பு, ஈரப்பத எதிர்ப்பு மற்றும் அதிக வலிமை போன்ற தரப் பண்புகளின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பிளைவுட்டை கிச்சன் மற்றும் பாத்ரூம் பகுதிகளிலும்கூட பயன்படுத்தலாம்.
இறுதியாக
இச்சமயத்தில் உங்களுக்கு வழக்கமான பிளைவுட் மற்றும் BWP Sainik பிளைவுட் ஆகிய இரண்டிற்கும் இடையிலுள்ள வேறுபாடு ஏற்கெனவே தெரிந்திருக்கும். இந்தியாவில் மழைக்காலமாக இருந்தாலும் அல்லது ஈரமான காலநிலையாக இருந்தாலும், ஈரப்பதம் என்பது எப்போதுமே பிரச்சனைக்குரிய ஒன்றுதான். உங்களுடைய பிளைவுட் தண்ணீர் எதிர்ப்புத்திறன் கொண்டதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், Sainik710 பிளைவுட் வழங்கும் பாதுகாப்பை கருத்தில்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்கு சிறந்த பிளைவுட்டையே வாங்கிடுங்கள். இந்தத் தயாரிப்பைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, கிளிக் செய்யவும்:
Loading categories...