Consumer
போலி பிளைவுட்டை அடையாளம்காண உறுதியான வழிகாட்டி

உள்ளடக்கம்:

1.1 அறிமுகம்

1.2 தரப் பரிசோதனைகள்

1.3 CenturyPromise

1.4 விரைவு உதவிக்குறிப்பு!


​​​​​​​​​​​​​​1.1 அறிமுகம்

இன்றைய சந்தை முழுவதும் மோசடியான பிளைவுட்டால் நிரம்பியிருக்கிறது. போலியான லோகோ முத்திரைகள் முதல் வண்ணங்களில் நனைக்கப்பட்ட பிளைவுட் வரை, போலிகளை விற்பவர்கள் நுகர்வோர்களைச் சம்மதிக்க வைக்க மிக மிகத் தந்திரமான வழிமுறைகளைக் கையாளுகிறார்கள்.

இதனால்தான் முழுமையாகத் தரப் பரிசோதனை செய்வது சரியான பிளைவுட்டை வாங்குவதற்கு அவசியமாகிறது. சரியான பிளைவுட்டை வாங்குவதற்கு நீங்கள் செய்யக்கூடிய சில தரப் பரிசோதனைகள் குறித்து நாம் பார்க்கலாம்.  

​​​​​​​​​​​​​​1.2 தரப் பரிசோதனைகள்

பிளைவுட்டை வாங்கும் முன்னர் நேரடி ஆய்வு செய்வதே நீங்கள் செய்யக்கூடிய குறைந்தபட்ச அளவிலான தரப் பரிசோதனையாகும். எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியவில்லையா? பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்:

● பிளவுகளும் வெடிப்புகளும்

● சீரான தன்மை

● நெகிழ்வுத்திறன் மற்றும் வளைதிறனை சரிபார்த்தல்

ஆனால் பிளைவுட் என்பது மொத்தமாக வாங்கக்கூடிய ஒன்று. நீங்கள் டீலர்/காண்ட்ராக்டர் அல்லது உங்களுடைய வீட்டைக் கட்டுகின்ற ஒருவர் என யாராக இருந்தாலும் ஒவ்வொரு பிளைவுட்டையும் பரிசோதிக்கின்ற சிக்கலான செயல்முறைக்கு உள்ளாக விரும்ப மாட்டீர்கள்.  

1.3 CenturyPromise

சரி, என்னதான் செய்யலாம்?

புதுமையான விஷயங்கள் மூலம் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு நிறுவனமாக, உங்களுடைய தரப் பரிசோதனைகளைப் பலமணிநேரங்களிலிருந்து நொடிகளுக்குள்ளாகக் குறைக்கும் பிரத்யேகத் தீர்வை நாங்கள் முன்வைக்கிறோம் -  அதுதான் CenturyPromise App.

ஒரே படிநிலையில் உங்களுடைய பிளைவுட் வாங்குதலை தீர்மானிப்பதற்கென்றே CenturyPromise App உருவாக்கப்பட்டுள்ளது.

செயலிகள் பயன்படுத்துவதற்குச் சிக்கலானவை!

நாங்கள் CenturyPromise செயலியை அறிமுகப்படுத்தியபோது இதே கேள்வியைக் கடந்துவந்திருக்கிறோம், “செயலிகள் பயன்படுத்துவதற்கு மிகவும் சிக்கலானவை அல்லவா?”, அதனால்தான் நாங்கள் முடிந்தவரை மிகவும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய பயன்பாட்டை உருவாக்குவதை உறுதிப்படுத்தியிருக்கிறோம். இவ்வாறு செய்வதற்கு, இந்தப் பயன்பாட்டை நாங்கள் இரண்டு நோக்கங்களுக்காக மட்டுமே அர்ப்பணித்திருக்கிறோம்,

1. பிளைவுட் வாங்குதலை சரிபார்ப்பதற்கு

2. இ-வாரண்டி சான்றிதழை பதிவிறக்கம் செய்வதற்கு

நாங்கள் மிகவும் எளிதான பயனர் இடைமுகத்தையும் வடிவமைத்திருக்கிறோம், இதனால் இந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு எந்தச் சிக்கலும் ஏற்படாது. CenturyPromise செயலியைப் பயன்படுத்தும் படிப்படியான செயலாக்கத்தின் வழியே உங்களை அழைத்துச் செல்கிறோம்.

CenturyPromise செயலியைப் பயன்படுத்துவதற்கான படிப்படியான செயல்முறை

CenturyPromise செயலி பயன்படுத்த மிகவும் சுலபமானது என்பதுடன் உங்களுடைய பிளைவுட்டை நொடிகளில் தீர்மானித்திட உங்களுக்கு உதவும் 5 படிநிலைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

  1. உங்களுடைய ஆப் ஸ்டோரில் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்யவும், இந்தப் பயன்பாடு iOS மற்றும் Android ஆகிய இரண்டிற்குமே கிடைக்கிறது.
  2. நீங்கள் எந்தப் பிரிவிற்குள் வருகிறீர்களோ, அதாவது ஆர்க்கிடெக்ட், காண்ட்ராக்டர், வாடிக்கையாளர் போன்ற பிரிவைத் தேர்வுசெய்வதன் மூலம் நீங்களாகவே பதிவுசெய்திடுங்கள்.
  3. நீங்கள் உள்ளே வந்ததும், ஸ்கேனர் பட்டனை கண்டறிந்து அதில் கிளிக் செய்யவும்.
  4. ஸ்கேனர் திறந்துகொண்டதும், உங்களுடைய பிளைவுட்டில் அச்சிடப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும், இது உங்களுக்கு முடிவு விண்டோவிற்கு நேரடியாக வழிகாட்டும்.
  5. அந்தத் தயாரிப்பு போலியானது என்றால் செயலியான “அசல் CenturyPly தயாரிப்பு அல்ல” என்ற மெசேஜை காட்டும், இல்லாவிட்டால் “அசல் CenturyPly தயாரிப்பு” என்று காட்டும்.

ஸ்கேனர் அதனைத் தீர்மானிக்கத் தவறினால் QR குறியீடு எண்களை நீங்கள் கைமுறையாகவும் உள்ளிடலாம்.

​​​​​​​​​​​​​​1.4 விரைவு உதவிக்குறிப்பு!

அங்கீகரித்தல் வெற்றிகரமாக நிறைவடைந்ததும், அதற்கான இ-வாரண்டி சான்றிதழை நீங்கள் பதிவிறக்கமும் செய்துகொள்ளலாம். எதிர்காலத்தில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எங்களுடைய வாடிக்கையாளர் சேவை சிறப்பாகச் சேவைசெய்ய இது உதவும்.

இந்தச் செயலியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளப் பார்வையிடவும்: https://www.centuryply.com/centurypromise-tamil  

எங்களுடைய வாடிக்கையாளர் சேவை அதிகாரியுடன் பேசுவதற்கு எங்களை அழைக்க வேண்டிய எண்: 1800-5722-122 (கட்டணமில்லாதது)  

Leave a Comment

Loading categories...

Latest Blogs