கட்டிடம் எழுப்புதல் மற்றும் கட்டுமானத் துறையில் அதிகாரபூர்வமாக நாம்
சார்ந்திருக்கும் ஒன்று பிளைவுட். புதிதான, நம்பகமான, சிறப்பான ஒன்றைக்
கட்டியெழுப்பும் யோசனை எழும்பும்போதெல்லாம், நாம் பிளைவுட்டைத் தெரிவு
செய்கிறோம். பிளைவுட் முதன்மையானது, ஏனெனில் அது பாதுகாப்பானது, நல்ல
தோற்றம் தருவது, விலை மலிவானது.
நீங்கள் கட்டுவது – தொழில்துறை சார்ந்ததாகவோ வணிகம் சார்ந்ததாகவோ, அல்லது குடியிருப்பாகவோ எதுவாக இருந்தாலும் செஞ்சுரிபிளையே சரியான தேர்வாகும். வலிமை ரீதியாக, விலை ரீதியாக, மற்றும் நம்பகத்தன்மை ரீதியாக செஞ்சுரி பிளைவுட் மிகச் சிறந்த தரத்தை அளிக்கிறது.
செஞ்சுரிபிளை இந்தியாவின் மிகச் சிறந்த மற்றும் மிகவும் நம்பகமான பிளைவுட் பிராண்ட் ஆகும். இது பிற கட்டுமானப் பொருட்களுடன் பலவிதமான பிளைவுட்களையும் கொண்டுள்ளது. ஆனால் நம் எல்லோருடைய பரபரப்பான கால அட்டவணையில், ஒரு தனிநபருக்கு தானே நேரில் சென்று தம் பொருட்களை எடுப்பதற்கு நேரமில்லை. மக்கள் இடைத்தரகர்களைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அது சில சமயங்களில் சூழ்ச்சிக்குரியதும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இங்குதான் செஞ்சுரிபிராமிஸ் செயலி தலையிட்டு நம் எல்லோரையும் காப்பாற்றுகிறது.
மிகச் சிறந்த கட்டுமானப் பொருட்களை வாங்க விரும்பும் எவரும் செஞ்சுரிபிராமிஸ் செயலியைப் பயன்படுத்தலாம். டீலர்கள், சில்லறை விற்பனையாளர்கள் முதல் வாடிக்கையாளர்கள் வரை யாரும் இந்தச் செயலியைப் பயன்படுத்தி பிளைவுட்டில் சமீபத்திய மற்றும் நம்பகமான பரிவர்த்தனைகளைப் பெறலாம். செஞ்சுரிபிராமிஸ் செயலி உங்களுக்கு உங்கள் வாசற்படியிலேயே சிறந்த பொருட்களை வழங்கும் உத்தரவாதத்தை அளிக்கிறது.
வாங்குபவர்களுக்கு உண்மையான பிளை மட்டும் வழங்குவதே இந்தச் செயலியின்
பின்னணியில் உள்ள சாராம்சம். சந்தையிலிருந்து போலி செஞ்சுரி ப்ளைவுட்
வாங்குவதற்கு ஒருவருக்கு நேரக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் அழிக்க
செஞ்சுரிபிளை முயல்கிறது. சந்தை முழுவதிலும் எவ்வாறு ஒரே மாதிரி
தோற்றமளிக்கும், போலியான, நகலான ப்ளைவுட் நிரம்பியுள்ளது என்பது குறித்து
நிறுவனத்தின் மேலாளர் ஒரு வெளிப்படையான அறிக்கையை அளித்தார்.
செஞ்சுரிபிளை ஆனது, செஞ்சுரிபிராமிஸ் செயலியைக் கொண்டு வந்து, இந்தக்
குழப்பங்களில் இருந்து ஒருவரது நேரத்தை மிச்சப்படுத்தி, மக்கள் பதற்றமில்லாமல்
செயலியின் அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டவாறு இருக்க வகை செய்துள்ளது.
செஞ்சுரிபிராமிஸ் செயலி மூலம் நிறுவனம் உண்மையான சேவைக்கும் போலிகளிலிருந்து பாதுகாப்பிற்கும் உறுதியளிக்கிறது. செயலியைப் பயன்படுத்தும் வரை வாங்குபவர்கள் கவலையின்றி இருக்கலாம் என்ற பொருளில் பயமின்றி இருங்கள் என்ற பிரபலமான கோஷத்தையும் இந்தச் செயலி கொண்டுள்ளது.
இச்செயலியில் மிக முக்கியமானதும் முன்னிலைப்படுத்துவதுமான அம்சம் என்னவெனில், நீங்கள் வாங்கியுள்ள பிளைவுட்டையும் இதில் பரிசோதிக்கலாம். பிளைவுட்டின் அனைத்து முக்கியத் தகவல்களையும் தெரிந்துகொள்வதற்கு, க்யூஆர் குறியீட்டை மட்டும் ஸ்கேன் செய்தால் போதுமானது. ஒருவேளை ஒருவர் அருகாமையிலுள்ள கடையிலிருந்து செஞ்சுரிபிளையை வாங்கியிருந்தால், அதன் உடல் பாகத்திலுள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து அதன் நம்பகத்தன்மை குறித்து எளிதாகத் தீர்மானிக்கலாம். செயலி உடனடியாக அந்தப் பிளைவுட் குறித்த எல்லாத் தகவல்களையும் அளித்து, நீங்கள் வாங்கியிருப்பது உண்மையான பிளைவுட்டா, அல்லது போலியா என்பதை அறிந்துகொள்ள வகைசெய்யும்.
ஸ்கேன் செய்வதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், நாமாகவே க்யூஆர் குறியீட்டை இடும் தெரிவும் செஞ்சுரிபிராமிஸ் செயலியில் உள்ளது. நீங்கள் உண்மையான செஞ்சுரிபிளையை வாங்கியிருந்தால், உங்களுக்கு எல்லாத் தகவல்களும் அளிக்கப்படும்.
செஞ்சுரிபிராமிஸ் செயலி அணுகுவதற்கும் மிக எளிதானது. இச்செயலியைப்
பயன்படுத்துவதற்கான செயல்முறைகள் பின்வருமாறு -
● பிளேஸ்டோரிலிருந்து செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.
● செயலியில், நீங்கள் அதன் நன்மைகளைப் பெறும் வகையில் உங்களது எல்லா
விவரங்களையும் பதிவுசெய்துகொள்ளவும்.
● பதிவுசெய்துகொள்வதன் மூலம் நீங்கள் இறுதியில் செயலியில் உள்நுழைவு
செய்ய முடியும்.
● எல்லா விவரங்களையும் பெறுவதற்கு உங்களுக்கு இரண்டு தெரிவுகள்
தரப்படும். – 1. பிளை மீதுள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யவும்,
அல்லது 2. க்யூஆர் குறியீட்டை நீங்களாகவே இடவும்.
● தயாரிப்பு உண்மையான செஞ்சுரிபிளை தயாரிப்பாக இல்லாமல் இருந்தால்,
உங்கள் திரையில், “உண்மையான செஞ்சுரிபிளை தயாரிப்பு அல்ல” என்ற
செய்தி தோன்றும்.
● செயலியிலேயே நீங்கள் மின்னணு-உத்தரவாதத்தை உருவாக்கி உங்களிடமும்
ஒரு நகலை வைத்துக்கொள்ளலாம்.
● உங்கள் எண்ணிலும் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியிலும் மின்னணு-
உத்தரவாதத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.
● அது மட்டுமல்ல, செஞ்சுரிபிராமிஸ் செயலியில் பிளைவுட்டிற்கான சமீபத்திய
பரிவர்த்தனைகள் மற்றும் சலுகைகள் குறித்த அட்டவணையையும் நீங்கள்
வைத்துக்கொள்ளலாம்.
● பின்னூட்டம் தரும் பிரிவும் இதில் உள்ளது. செயலியைப் பயன்படுத்திய
உங்கள் அனுபவம் மற்றும் இன்னும் எது சிறப்பாக இருந்திருக்கலாம்
போன்றவை குறித்து நீங்கள் எழுதலாம். இவ்விதம் செஞ்சுரிபிளை தன்னை
மேம்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில்
சரிப்படுத்திக்கொள்ளவும் முடியும்.
ஏராளமான போலிகள் சந்தையில் உலவும் இக்காலகட்டத்தில், செஞ்சுரிபிராமிஸ்
செயலி நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையின் ஒரு கீற்றாக விளங்குகிறது. மிகக்
குறைந்தபட்ச பிரச்சனைக்குரிய வழிமுறைக்கு இச்செயலி உறுதியளிக்கிறது. வீட்டில் இருந்தவாறே, நீங்கள் உங்களுக்கு வரவேண்டியவற்றை முன்பதிவுசெய்து,
பெற்றுக்கொண்டு, பிற்பாடு அவற்றின் நம்பகத்தன்மையையும் ஆராய்ந்துகொள்ளலாம்.
செஞ்சுரிபிராமிஸ் செயலி ஒப்பந்தகாரர்கள் மற்றும் கட்டுமானம் செய்பவர்கள் அனைவரையும் கெட்ட பெயர் வராமல் பாதுகாப்பதுடன், வாடிக்கையாளர்களையும் எந்த விதமான தொந்தரவும் அலைக்கழிப்பும் இல்லாமல் காப்பாற்றுகிறது.
Loading categories...